Home நாடு அன்வாரின் பகுதி அமைச்சரவை மட்டுமே நாளை அறிவிக்கப்படலாம்!

அன்வாரின் பகுதி அமைச்சரவை மட்டுமே நாளை அறிவிக்கப்படலாம்!

393
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முழுமையான அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) பதவியேற்காது என்றும் மாறாக பகுதி அமைச்சரவை மட்டும் முதலில் பதவியேற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்புன் தொகுதிக்கு நாளை செல்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மாநிலத்திற்கு முதன் முறை வருகை தரும் அன்வார் காலை 10.00 மணியளவில் பேராக் மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷாவைச் சந்திப்பார்.

அதன் பிறகு தம்புன் தொகுதியில் வாக்காளர்களுக்கு நடைபெறும் விருந்துபசரிப்பிலும், வெள்ளிக்கிழமை தொழுகையிலும் அன்வார் கலந்து கொள்வார்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு மாலை 4.00 மணிக்குப் பிறகு புதிய அமைச்சரவை குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான அமைச்சரவையை முதலில் அறிவிக்காமல் சில அமைச்சர்களை மட்டுமே கொண்ட பகுதி அமைச்சரவை முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் எஞ்சிய அமைச்சரவை அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்குக் காரணம் அமையவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெறவிருக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை எனக் கூறப்படுகிறது.