Home உலகம் தாய்லாந்து : அடுத்த பிரதமராக பாதேங் தோர்ன் ஷினவாத்ராவுக்கு ஆதரவு பெருகுகிறது

தாய்லாந்து : அடுத்த பிரதமராக பாதேங் தோர்ன் ஷினவாத்ராவுக்கு ஆதரவு பெருகுகிறது

521
0
SHARE
Ad
பதோங்தார்ன் ஷினவாத்ரா

பேங்காக் : தாய்லாந்து அரசியலில் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவின் பெயரும் புகழும் இன்னும் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடீஸ்வர வணிகரான அவர் தற்போது நாடு கடந்து வாழ்ந்தாலும், அவருக்குப் பின்னர் அவரின் தங்கை யிங்லக் ஷினவாத்ரா தாய்லாந்து பிரதமராக ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டார்.

அடுத்து நடைபெறவிருக்கும் தாய்லாந்து தேர்தல்களின் மூலம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளவராக தக்சின் ஷினவாத்ராவின் இளைய மகள் பதோங்தார்ன் ஷினவாத்ரா திகழ்கிறார். அவருக்கு வயது 36.

அவருக்குக் கடும் போட்டியை வழங்கக் கூடியவராக நடப்புப் பிரதமரான பிராயுத் சான் ஓச்சா கணிக்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice

பொதுமக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஆய்வில் பதோங்தார்ன் ஷினவாத்ரா முன்னணி வகிக்கிறார்.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள்ளாக தாய்லாந்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.