ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் – சர்வதேச – பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்
கோலாலம்பூர் – தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வாயிலாக முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் மற்றும் சர்வதேசப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். அனைத்து மலேசியர்களும் ராகா வானொலியில் இடம்பெறும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளையும் எதிர்ப்பார்க்கலாம்.
பின்வரும் உள்ளூர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:
• துடிப்பான ரியாலிட்டி நிகழ்ச்சி, விலேஜ் பொங்கல், உள்ளூர் சமூக ஊடகப் பிரபலங்களைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்று பொங்கல் தொடர்பானப் பணிகளை நிறைவேற்ற வைப்பதைச் சித்திரிக்கிறது.
ஜனவரி 11, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் விலேச் பொங்கல் நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• ரியாலிட்டி நிகழ்ச்சி, சரவெடிப் பொங்கல், பிரபல உள்ளூர் தொகுப்பாளர்களான, ஆனந்தா மற்றும் உதயா இருவரும் விவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்ட்டங்களை உணர ஒரு நாள் விவசாயிகளாவதோடு, விவசாயிகளுக்காக நன்றி உணர்வை ஏற்படுத்தவும், பொங்கலின் போது அவர்களைக் கொண்டாடவும் தங்களதுப் பயணத்தைத் தொடங்குவதைச் சித்தரிக்கின்றது. ஜனவரி 14, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் சரவெடிப் பொங்கல் நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• முறையே ஜனவரி 14, இரவு 10 மணிக்கு மற்றும் ஜனவரி 15, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் செந்தோழன் செங்கதிர்வாணன் மற்றும் ஐவர் ஆகிய இரு திரில்லர் திரைப்படங்கள் முதல் ஒளிபரப்புக் காணுகின்றன.
• விளையாட்டு நிகழ்ச்சிகள்:
o பாபா’ஸ் எங்கள் இன்ஸ்டா செஃப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி-இல், சமையல் போட்டியின் 15 மாதாந்திர வெற்றியாளர்கள் பொங்கல் தொடர்பானப் பணிகளைச் செய்து முடிப்பர். ஜனவரி 15, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
o ஜனவரி 17, இரவு 8 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பொங்கல் படேப் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
இந்தியாவிலிருந்துப் பின்வரும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:
• புகழ்பெற்ற இந்தியப் பாடகர்களான ஹரி ஹரன், சாதனா சர்கம், சிவாங்கி, உன்னி மேனன், ஸ்ரீராம் மற்றும் ரீத்தா ஆகியோர் இடம்பெரும், புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞரும் பாடகருமான இசைஞானி இளையராஜாவின் மனதை வருடும் பாடல்கள் இடம்பெரும் மெல்லிசை இசை நிகழ்ச்சிப், பொன்மாலைப் பொழுது. ஜனவரி 15, மதியம் 2 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பொன்மாலைப் பொழுது முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• ஜனவரி 16, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் காதல் நாடகத் திரைப்படம், நித்தம் ஒரு வானம் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
ராகா வானொலியில்…
வானொலி முன்னணியில் மலேசியர்கள் பொங்கலைக் கொண்டாடும் நவீன முறைகள் பற்றிய வேடிக்கையான விவாதத்தைக் கேட்டு மகிழலாம். சுரேஷ், அகிலா மற்றும் நேயர்கள் இடையேயான ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாட்டத்தை இரசிகர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் ஜனவரி 16 கண்டு களிக்கலாம். மேல் விபரங்களுக்கு ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.