Home நாடு மூத்த எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் காலமானார்

மூத்த எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் காலமானார்

876
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நமது நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், பன்முகத் திறமை வாய்ந்தவருமான நா.ஆ.செங்குட்டுவன் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்குள் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அவருக்கு வயது 79.  அன்னாரின் நல்லுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள் எண்: 20, ஜாலான் செத்தியா டூத்தா, யு13/23z, செத்தியா எக்கோ பார்க் 40170 ஷா ஆலம், சிலாங்கூர் என்னும் முகவரியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரின் மகள் உமாதேவி தெரிவித்தார்.