Home இந்தியா அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்

829
0
SHARE
Ad

சென்னை : இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அதிமுக சார்பில் போட்டியிடுவோம்’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டாலும் வேறொரு சின்னத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், கடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியான தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் அங்கு நேரடியாகப் போட்டியிடுவதாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதனால் யாருக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

பாஜக போட்டியிட்டால், அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார்.