Home நாடு மொகிதின் யாசின் செல்வாக்கு 6 குற்றச்சாட்டுகளினால் சரியுமா? 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது

மொகிதின் யாசின் செல்வாக்கு 6 குற்றச்சாட்டுகளினால் சரியுமா? 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் செல்வாக்கு சரியுமா? எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவு கூடுமா? குறையுமா? என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

மொகிதின் யாசின் மீது 6 குற்றச்சாட்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 10) கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது. அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

#TamilSchoolmychoice

232.5 மில்லியன் ரிங்கிட் அதிகார விதிமீறல், 195 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

மொகிதின் யாசின் ஊழல் வழக்கை எதிர்நோக்கும் 2ஆவது பிரதமர் ஆவார்.

232.5 மில்லியன் ரிங்கிட் தொகை தொடர்புடைய நான்கு அதிகார விதிமீறல் குற்றச்சாட்டுகளும் 195 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பிலான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன.

இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்த நீதிபதி அஸுரா அல்வி அனைத்துலகக் கடப்பிதழை அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த மொகிதின் யாசின், விசாரணை கோரினார். அவருக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) டத்தோ அமாட் தெரிருடின்  முகமட் சாலே தலைமையிலான வழக்கறிஞர்கள் அரசாங்கத் தரப்பில் ஆஜராகினர்.

மொகிதின் யாசினை வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் பிரதிநிதித்து  பிரதிநிதித்தார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி மே 26 என நீதிபதி நிர்ணயித்தார்.