Home நாடு அன்வார் இப்ராகிம் அறிவிப்பு : எல்லா மாநிலங்களிலும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புகள்

அன்வார் இப்ராகிம் அறிவிப்பு : எல்லா மாநிலங்களிலும் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்புகள்

896
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அரசாங்கம் சார்பில் பிரதமர் கலந்து கொள்ளும் ஹரிராயா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்தன.

விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் குறிவைத்து இந்த திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்தப்படுகின்றன என்ற குறைகூறல்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்தப்படும் என அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார். பாஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்கள் மட்டுமின்றி மற்ற எல்லா மாநிலங்களிலும், சிலாங்கூர் உட்பட திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்தப்படும் என அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.