Home கலை உலகம் நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார்

1145
0
SHARE
Ad
சரத்பாபு

ஐதராபாத் : கதாநாயகனுக்கு நண்பனாக பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் காலமானார்.

முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவைத் திருமணம் செய்யும் என்ஜினியராக, சலங்கை ஒலியில் கமல்ஹாசனுக்கு இறுதி வரை துணை நிற்கும் நண்பனாக, அண்ணாமலை, முத்து படங்களில் ரஜினிகாந்தின் நண்பனாக – இப்படியாக பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நம்மைக் கவர்ந்தவர் சரத்பாபு.

நடிகர் சரத்பாபு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று காலமானார்.

#TamilSchoolmychoice

72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரத்பாபு இறுதிச் சடங்கு சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.