Home நாடு அக்ரில் சானி ஏற்கப் போகும் புதிய பதவி?

அக்ரில் சானி ஏற்கப் போகும் புதிய பதவி?

1150
0
SHARE
Ad

கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய தலைவராக (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 முதல் பதவி வகிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக காவல் துறையின் இரண்டாவது நிலை பதவியை அயூப் கான் வகிக்கவிருக்கிறார்.

அயூப் கான் கடந்த சில ஆண்டுகளாக தனது போதைப் பொருள் கடத்தல், குற்றச் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வந்தார். அதன் காரணமாக மக்களிடையே பிரபலமாகவும் திகழ்ந்தார். அவரின் துணை ஐஜிபி நியமனத்திற்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது.

61 வயதான புதிய ஐஜிபி ரசாருடின் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்பையில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காவல் துறையில் மேற்கொள்ளப்படும் மிக முக்கிய பதவி மாற்றம் இதுவாகும்.

காவல் துறையின் தலைவராக டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானியின் ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக, அவர் ஓய்வு பெறுகிறார்.

பிரதமர் தனக்கு அளித்த புதிய பதவியை ஏற்பதற்காகவே பதவி விலகுவதாக அக்ரில் சானி தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவருக்குக் கிடைக்கப் போகும் புதிய பதவி என்ன? அது அனைத்துலகப் பதவியா? என்பது போன்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

நாட்டின் 13-வது ஐஜிபியாக அக்ரில் சானி பதவி வகித்து வந்தார். 2021-இல் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பதிலாக அக்ரில் சானி நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் கட்டாய பதவி ஓய்வு பெற வேண்டியிருந்தது.

இருப்பினும் அவரின் ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.