Home நாடு டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

475
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நீண்டகாலமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவராக சேவையாற்றி வரும் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

லீடர்ஸ் ஒன்லைன் (Leaders Online) குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைமைத்துவ ஆற்றல் சிறப்பு விருதுகள் விழா புதன்கிழமை ஜூலை 12-ஆம் தேதி தலைநகர் மாண்டரின் ஓரியண்டல் தங்கும் விடுதியில் நடத்தப்பட்டது. அந்த விழாவில் நடராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ எம்.சரவணன் தம்பதியினர் நடராஜாவுக்கும் அவர்தம் துணைவியாருக்கும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice