Home நாடு சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் : செந்தோசா தொகுதியில் பிகேஆர் சார்பில் குணராஜ் மீண்டும் போட்டி

சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் : செந்தோசா தொகுதியில் பிகேஆர் சார்பில் குணராஜ் மீண்டும் போட்டி

370
0
SHARE
Ad
குணராஜ் ஜோர்ஜ்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவர்களில் 11 பேர் புதுமுகங்கள். மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சுங்கை துவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் சிலாங்கூர் மந்திரி பெசார் ஆவார் எனக் கூறப்படுகிறது.

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் குணராஜ் ஜோர்ஜ் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 38,106 வாக்குகள் பெற்று மஇகா வேட்பாளர்கள் டத்தோ ஆர்.சுப்பிரமணியத்தையும், பாஸ் வேட்பாளரையும் தோற்கடித்தார். 33,600 பெரும்பான்மையில் அவர் வெற்றி பெற்றார்.

43 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களைக் கொண்டது செந்தோசா தொகுதியாகும். 38 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும் இந்தத் தொகுதி கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி செந்தோசா ஆகும்.