பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதியான புக்கிட் காசிங் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த 2 தவணைகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவி வகித்தவருமான கணபதி ராவின் இளைய சகோதரர் பாப்பாராய்டு வீரமன் பந்திங் சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.
முதன் முறையாக அவர் பந்திங் சட்டமன்றத்தில் அவர் போட்டியிடுகிறார். இந்தியர் ஒருவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதும் இதுவே முதன் முறையாகும்.
சிலாங்கூரிலுள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணபதி ராவ் இந்த முறை மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் பிரகாஷ் சம்புநாதன் அங்கு வேட்பாளராக ஜசெக சார்பில் நிறுத்தப்படுகிறார்.
கணபதி ராவ் 15-வது பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால் இந்த முறை அவருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆக, ஜசெக போட்டியிடும் 15 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.