Home நாடு பந்திங் சட்டமன்றம் : ஜசெக சார்பில் கணபதிராவ் தம்பி பாப்பாராய்டு போட்டி

பந்திங் சட்டமன்றம் : ஜசெக சார்பில் கணபதிராவ் தம்பி பாப்பாராய்டு போட்டி

448
0
SHARE
Ad
பாப்பாராய்டு வீரமன்

பெட்டாலிங் ஜெயா : கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த 2 தவணைகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவி வகித்தவருமான கணபதி ராவின் இளைய சகோதரர் பாப்பாராய்டு வீரமன் பந்திங் சட்டமன்றத்திற்கு போட்டியிடவிருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்திற்கான ஜசெக வேட்பாளர் பட்டியலில் பாப்பாராய்டு பெயரும் இடம் பெற்றிருந்தது.

அரசியலில் தன் அண்ணனுக்கு உதவியாக இருந்தவர் பாப்பாராய்டு. அவ்வப்போது சமூக நலம் சார்ந்த கருத்துகளையும் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வந்தவர் பாப்பாராய்டு.

#TamilSchoolmychoice

முதன் முறையாக அவர் பந்திங் சட்டமன்றத்தில் அவர் போட்டியிடுகிறார். இந்தியர் ஒருவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதும் இதுவே முதன் முறையாகும்.

2018 பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் லாவ் வெங் சான் 21,846 வாக்குகள் பெற்று 17,299 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.

இந்தத் தொகுதியில் சுமார் 22 விழுக்காட்டு வாக்காளர்கள் இந்தியர்களாவர். சீன வாக்காளர்கள் 59 விழுக்காடும், மலாய் வாக்காளர்கள் 18 விழுக்காடும் இந்தத் தொகுதியில் உள்ளனர்.