Home நாடு கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி : பிரகாஷ் சம்புநாதன் ஜசெக சார்பில் போட்டி

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி : பிரகாஷ் சம்புநாதன் ஜசெக சார்பில் போட்டி

329
0
SHARE
Ad
பிரகாஷ் சம்புநாதன்

கிள்ளான் : சிலாங்கூரிலுள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கணபதி ராவ் இந்த முறை மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் பிரகாஷ் சம்புநாதன் அங்கு வேட்பாளராக ஜசெக சார்பில் நிறுத்தப்படுகிறார்.

கணபதி ராவ் 15-வது பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால் இந்த முறை அவருக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

14-வது பொதுத் தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில் போட்டியிட்ட கணபதி ராவ் 28,617 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ், கெராக்கான் வேட்பாளர்களை 21,639 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

கோத்தா கெமுனிங் தொகுதியில் 41 விழுக்காடு மலாய் வாக்காளர்களும் சீன வாக்காளர்கள் 34 விழுக்காடும் இந்திய வாக்காளர்கள் 24 விழுக்காடும் இருக்கின்றனர்.