Home நாடு இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

264
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : இன்று செவ்வாய்க்கிழமை மாலை பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக பிறை சட்டமன்றத் தொகுதியில் சுந்தரராஜூ சோமு போட்டியிடுகிறார்.

பினாங்கு மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளில் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் 3 பேர் இந்தியர்களாவர். பிறை தொகுதியில் போட்டியிடும் சுந்தரராஜூ தவிர்த்து பாகான் டாலாம் தொகுதியில் குமரன் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். ஏற்கனவே பாகான் டாலான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சதீஸ் முனியாண்டிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

டத்தோ கிராமாட் சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான ஜக்டீப் சிங் டியோ மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

இராமசாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் இந்தியர்களின் ஆதரவு வாக்குகளைப் பெறுவதில் பக்காத்தான் – ஜசெக கூட்டணி பின்னடைவைச் சந்திக்கலாம் என்ற ஆரூடங்களும் கூறப்படுகின்றன.

பினாங்கு மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களிலும் இராமசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் பாதிப்பு இருக்குமா என்பது அடுத்த கட்ட பிரச்சாரங்களின்போது தெரியவரும்.