Home நாடு நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : தஞ்சோங் தொகுதியில் – ரவிக்கு வாய்ப்பில்லை – டாக்டர்...

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : தஞ்சோங் தொகுதியில் – ரவிக்கு வாய்ப்பில்லை – டாக்டர் ராஜசேகரன் போட்டி

466
0
SHARE
Ad
தஞ்சோங் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ரவி

சிரம்பான் : நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் சிக்காமாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமினுடின் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்கிறார்.

பிகேஆர் கட்சியின் 6 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே இந்தியராவார். போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட ரவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டாக்டர் ராஜசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.