களைப்பினால் அவர் மயக்கமடைந்ததாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரின் பிகேஆர் சகாக்கள் தெரிவித்தனர்.
அவரது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் அவர் தரையில் முகம் குப்புறப் படுத்த நிலையில் அவர் காணப்பட்டார்.
இதற்கிடையில், லீயை எதிர்த்துப் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் டான் ஹம் வெய், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
லீ தொடர்ந்து மூன்றாவது முறையாக மச்சாங் புபுக்கை பிகேஆர் கட்சி சார்பாக தற்காக்கிறார். கெராக்கான் – பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டான் ஹம் வெய்யை அவர் நேரடிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.