Home நாடு அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றம் எப்போது?

அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றம் எப்போது?

352
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில் அமைச்சரவை மாற்றம் எப்போது அறிவிக்கப்படும் என்ற ஆர்வம் மலேசியர்களிடையே எழுந்துள்ளது.

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை நலம் அமைச்சரான சலாஹூடின் அயூப் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் நாடாளுமன்றத் தொகுதியான பூலாய் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று பக்காத்தான் ஹாரப்பான் அங்கு வெற்றி பெற்றது.

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை நலம் அமைச்சுக்கு மட்டும் அமானா கட்சி சார்பில் ஒருவர் நியமிக்கப்படுவாரா? அல்லது மற்ற அமைச்சுகளையும் கட்சிளையும் உள்ளிட்ட அமைச்சரவை மாற்றங்களை அன்வார் மேற்கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

சலாஹூடினுக்குப் பதிலாக புதிய அமைச்சரின் நியமனம் விரைவில் அறிவிக்கப்படும் என அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.

பரவலான அளவில் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தால் இந்திய அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் இந்திய சமூகத்தில் எழுந்துள்ளது.

மஇகா அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில மாதங்களாக வலுத்து வருகிறது.