Home நாடு “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மலேசியர்களாக வாழ்வோம்” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

“வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மலேசியர்களாக வாழ்வோம்” – சரவணன் மலேசிய தின வாழ்த்து

338
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும்
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ  
டாக்டர் எம்.சரவணன் அவர்களின்

மலேசிய தின நல் வாழ்த்துகள்

உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள். பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும்,  நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் பெருமிதத்தோடு இந்த மலேசிய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது தனித்துவமிக்க வாழ்க்கை முறை, மலேசியர்களின் பண்பாட்டையும், புரிந்துணர்வையும் உலகெங்கும் உரக்கச் சொல்கிறது. பொதுவாக மலேசியர்கள் பல்வேறு வாழ்க்கை முறை, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும் உணவு, பண்டிகைகள் என்று வரும்போது தனித்துவமிக்க ஒற்றுமையைக் காணலாம்.

காலையில் நாசி லெமாக், மாலையில் மீ கோரேங், மதியம் வாழை இலை உணவு என்று அனைத்து இனத்தவரின் உணவையும் ருசித்து, ரசித்துச் சாப்பிட்டு, அதற்குப் பழக்கப்பட்டு விட்டோம். அதே போல ஹரி ராயா, சீனப்புத்தாண்டு, தீபாவளி என ஒவ்வொரு பெருநாளுக்கும் பொது விடுமுறை என்ற பெயரில் அனைவருக்குமே விடுமுறை, குதூகலம், கொண்டாட்டம்தான். நமது நாட்டில்தான் திறந்த இல்ல உபசரிப்பு என்று ஒவ்வொரு பெருநாளுக்கும் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து உபசரித்து மகிழ்கிறோம். இந்த ஒன்றிப்பிணைந்த வாழ்க்கையே நமது தனிச்சிறப்பு.

#TamilSchoolmychoice

நாம் அனைவரும் ஓரே மலேசியர்கள் எனும் உணர்வோடு இங்கு வாழ்ந்து வருகிறோம். அது நீடித்து நிலைத்திருக்க வேண்டும்.

நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் அதே வேளையில், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பண்பும், புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்திருப்பது முக்கியம். ஒற்றுமை உணர்வு அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்க வேண்டும்.

நம்பிக்கையோடு ஒற்றுமையாய் வாழ்வோம், ஒன்றுபட்டு முன்னேறுவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனும் தமிழரின் வாழ்வியல் கூற்று என்றுமே பொய்த்ததில்லை.

வாழ்க மலேசியா, வளர்க மலேசியர்.

அன்புடன்,

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்