
கோலாலம்பூர் : நாட்டின் பிரபல தமிழ் எழுத்தாளரும், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடைப் பேச்சு என பன்முகத் தன்மை கொண்ட திறனாளருமான சை.பீர் முகம்மது இன்று செவ்வாய்க்கிழமை காலையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.
அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் அன்வார் இப்ராகிம் பீர் முகம்மதுவின் இலக்கியச் சேவைகளுக்காக அவருக்கு சிறப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.