Home நாடு மொகிதின் யாசினின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

மொகிதின் யாசினின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

232
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்களின் நிறுவனத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தியதாக இந்த சம்பவத்தை அறிந்த நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரோஸ்லி டஹ்லான் சரவணா (ஆர்.டி.எஸ்) என்ற சட்ட நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சேர்ந்த 12 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த நிறுவனத்தின் ஆவணங்களைத் தேடுவதற்கும் கைப்பற்றுவதற்கும் எம்ஏசிசி அதிகாரிகள் உரிமை கோரினர். முன்னதாக, மொகிதினுக்குச் செயல்பட்ட சேத்தன் ஜெத்வானி & கோ நிறுவனத்தின் சட்ட அலுவலகத்திலும் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்த முயன்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆர்.டி.எஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான ரோஸ்லி டஹ்லான் பெர்சாத்து கட்சி மற்றும் கட்சியின் தலைவர் மொகிதினின் முக்கிய சட்ட ஆலோசகராக செயல்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினின் அவதூறு வழக்கில் மொகிதினுக்காக ஆர்.டி.எஸ் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.