Home நாடு ஏழைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் 40% கழிவு

ஏழைகளுக்கு மின்சாரக் கட்டணத்தில் 40% கழிவு

407
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களின் மின்சாரக் கட்டணத்தில் 40 ரிங்கிட் கழிவு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார். இதற்காக 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சருமான அவர் பிரதமரானதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில கூடுதல் அம்சங்களை இணைத்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த 2023 வரவு செலவு திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபரில் அப்போதைய நிதியமைச்சர் தெங்கு சப்ருல்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

393.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டை 2024 வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கும் என அன்வார் அறிவித்தார்.

இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி – 42.3 விழுக்காடு நிதி, கல்வி, சுகாதாரம் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் எனவும் தன் உரையின் தொடக்கத்தில் அன்வார் தெரிவித்தார்.