Home நாடு டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் சரோஜா பாலன் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் சரோஜா பாலன் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும்

503
0
SHARE
Ad

கிள்ளான் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரன் சன்னாசி இன்று சனிக்கிழமை (4 நவம்பர் 2023) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார்.

நண்பர்களிடையே அவர் பரவலாக சரோஜா பாலன் என அழைக்கப்பட்டார். அண்மையில் மலாக்கா மாநில ஆளுநரின் டத்தோ விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பாலன்குமாரன் தேசிய ஒற்றுமை இயக்கத்தின் ( Pertubuhan Integrasi Nasional – PIN ) தோற்றுநரும், ம.இ.கா ஜாலான் சரோஜா கிளை தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

மறைந்த டத்தோ பாலன்குமாரன் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கீழ்க்காணும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணிவரை இறுதிச் சடங்குகள் நடைபெறும்:

No 19, Jalan Anggerik Vanda II, 31/166B Kota Kemuning Hills, Kota Kemuning, 40460 Shah Alam, Selangor

அதன் பின்னர் டத்தோ பாலன்குமாரன் நல்லுடல் ஷா ஆலாம், செக்‌ஷன் 21, நிர்வாணா மெமோரியல் பார்க் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு :

அரவிந்த் – 010-2211881
மாதவா – 016-9510431
ஜீவா – 013-2899815