Home நாடு சாஹிட் ஹாமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கிறார்

சாஹிட் ஹாமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கிறார்

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பணிக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது ஓய்வில் இருக்கிறார்.

புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அகமட் சாஹிட் ஹமிடி, இன்று வியாழக்கிழமை (நவம்பர் 23) தன் முகநூல் பதிவின் மூலம் இதனைத் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் தனது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எனக்காக பிரார்த்தனை செய்த மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி” எனக் குறிப்பிட்ட அவர் கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அகமட் சாஹிட் ஹமிடியின் மகள் டத்தோ நூருல்ஹிதாயா அகமட் சாஹிட், வியாழன் (நவம்பர் 16) நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது தந்தை நலமாக இருப்பதாகக் கூறினார்.