Home Photo News ரஜினி-கமல் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே படப்பிடிப்பு அரங்கில் சந்திப்பு

ரஜினி-கமல் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே படப்பிடிப்பு அரங்கில் சந்திப்பு

587
0
SHARE
Ad

சென்னை : இளைஞர்களாக இருந்தபோது சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்! ஒரு காலகட்டத்தில் தனித் தனியே நடிப்பது – இனி இணைந்து ஒரு படத்தில் நடிப்பதில்லை – என முடிவெடுத்தனர் இருவரும்.

அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் தனித் தனியாக நடித்தனர். ஆனாலும் ஒரே படப்பிடிப்பு அரங்கில் (ஸ்டூடியோ) அவர்கள் கடந்த 21 வருடங்களில் ஒரே சமயத்தில் நடித்ததில்லை.

இன்று அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கமல் நடிப்பில் உருவாக்கும் இந்தியன்-2, தலைவர் 170 என்ற பெயரில் உருவாகி வரும் ரஜினியின் புதிய படம் இரண்டுக்குமான படப் பிடிப்பு ஒரே அரங்கில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 23) நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அப்போது சந்தித்துக் கொண்ட ரஜினியும் கமலும் அந்த இனிய தருணத்தை கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கொண்டாடினார்கள்.

அந்த இரு படங்களையும் தயாரிக்கும் நிறுவனம் என்னும் வகையில் பெருமை கொள்கிறோம் என லைக்கா புரொக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்திலும் அறிவித்திருக்கிறது.