Home உலகம் ஹென்ரி கிசிஞ்சர் 100-வது வயதில் காலமானார்

ஹென்ரி கிசிஞ்சர் 100-வது வயதில் காலமானார்

513
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் அனைத்துலக அளவில் தலைசிறந்த அரச தந்திரியுமான ஹென்ரி கிசிஞ்சர் தனது 100-வது வயதில்
புதன்கிழமையன்று (நவம்பர் 29) காலமானார்.

இளம் வயதில் ஜெர்மனியில் நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பித்து அமெரிக்கா சென்ற யூதரான ஹென்ரி கிசிஞ்சர், அமெரிக்க அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும், வெளியுறவு அமைச்சராகவும் பதவிகள் வகித்தவர்.

சீனாவின் மா சே துங் – சௌ என் லாயுடன் கிசிஞ்சர்

1970-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளின் சிற்பியாக அவர் திகழ்ந்தார். அவரின் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்துலக அளவிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

#TamilSchoolmychoice

வியட்னாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் நிக்சன் முதன் முதலில் 1972-இல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவைத் தொடங்குவதற்கு காரணகர்த்தாவும் ஹென்ரி கிசிஞ்சர்தான்.

அதே வேளையில் அனைத்துலக அளவில் பல சர்ச்சைக்குரிய முடிவுகளையும் அவர் எடுத்தார். வெளியுறவு அமைச்சர் பதவியைத் துறந்த பின், உலகம் முழுவதும் பயணம் செய்து உரைகளை நிகழ்த்தியதோடு, அரச தந்திர ஆலோசனைகளையும் பல நாடுகளுக்கு வழங்கி வந்தார்.