Home நாடு கெமாமான் இடைத் தேர்தல் – அகமட் சம்சூரி அபார வெற்றி

கெமாமான் இடைத் தேர்தல் – அகமட் சம்சூரி அபார வெற்றி

659
0
SHARE
Ad

கெமாமான் : சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற  கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஸ்-பெரிக்காத்தான் வேட்பாளரும் திரெங்கானு மந்திரி பெசாருமாகிய அகமட் சம்சூரி மொக்தார் அபார வெற்றி பெற்றார்.

அவருக்கு 64,998 வாக்குகள் கிடைத்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளர் டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டிக்கு 27,778 வாக்குகளே கிடைத்தன.

டாக்டர் சாம் என அன்புடன் அழைக்கப்படும் சம்சூரி 37,220 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

திரெங்கானு மந்திரி பெசார் பாஸ் வேட்பாளர்

இங்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி- பாஸ் சார்பில், போட்டியிட்ட திரெங்கானு மாநில மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தார் எதிர்காலத்தில் பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆகலாம் என கெமாமான் பிரச்சாரங்களின்போது பெரிக்காத்தான் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோடி காட்டியிருந்தார்.

53 வயதான சம்சூரி பாஸ் கட்சியின் 3 உதவித் தலைவர்களில் ஒருவராவார். திரெங்கானு பாஸ் கட்சியின் துணை ஆணையருமாவார்.

இயந்திரவியல் துறையில் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்ற சம்சூரி பாஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.

ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதி அம்னோ வேட்பாளர்

தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோவின் வேட்பாளரான  டான்ஸ்ரீ ராஜா முகமட் அஃபாண்டி ராஜா முகமட் நூர் ஆயுதப் படைகளின் முன்னாள் தளபதியாவார். ராஜா முகமட் வெற்றி பெற்றால் அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல் முக்கியப் பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படும் என அன்வார் இப்ராகிம் கெமாமானில் பிரச்சாரம் செய்தபோது குறிப்பிட்டார்.