இஸ்லமாபாத், ஏப்ரல் 26- பெனாசிர் கொலைவழக்கில் முஷாரப்பை சேர்த்ததை அடுத்து அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.
இந்நிலையில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அவர் சமீபத்தில் பாகிஸ்தான் வந்தார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகமல் முஷாரப் ஜாமின் பெற்று வந்தார்.
கடந்த வாரம், நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கு தொடர்பாக முஷாரப் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2007 கொலைசெய்யப்பட்ட பெனாசிர் கொலை வழக்கு தொடர்பாக, தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.
இதனை அடுத்து மத்திய புலனாய்வு நிறுவனம் அவரது பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த முஷாரப்பை முறைப்படி கைது செய்தனர்.
அவரது பண்ணை வீட்டிலேயே இருக்கும் அவர், இன்று ராவல்பிண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.