ஆஸ்ட்ரோ பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்புகளுடன் பொங்கலை வரவேற்கிறது
கோலாலம்பூர் – பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பொங்கல் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. புத்தாண்டின் தொடக்கத்தில் இது மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பலவிதமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு பொங்கல் முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பண்டிகையை ஆஸ்ட்ரோ வரவேற்கிறது.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “குடும்பங்களோடு ஒன்றுபடுவதற்கான ஒரு நேரமாகப் பொங்கல் அமைகையில் #நன்றியைவிதைப்போம் என்ற இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு ஒப்ப நம் அன்புக்குரியவர்களையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் கருணையுடன் பாராட்டுவதன் மூலம் நன்றியின் விதைகளைப் பயிரிடுவோம். நாடக டெலிமூவி, விளையாட்டு நிகழ்ச்சி, பயணத் தொடர், இசை நிகழ்ச்சி, குடும்ப நாடகத் தொடர் மற்றும் பல உள்ளூர் மற்றும் பன்னாட்டு முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பொங்கலில் அதிகப் பொழுதுபோக்கு மற்றும் சிறந்த மதிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றித் தெரிவிப்பதோடுப் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்குப், பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
பின்வரும் உள்ளூர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:
• பினாங்கில் பொங்கல் தொடர்பானச் சவால்களில் ஈடுப்படும் சாம்வானன் மற்றும் ஷனா ராவ் ஆகியோரைக் கொண்ட உள்ளூர் திரைப்பட இயக்குநர் லோயேஸ்வரன் மகாலிங்கம் இயக்கியப் பயணத் தொடரின் வேடிக்கையானச் சிறப்பு அத்தியாயம், பயணம்@ஐலன்.
ஜனவரி 15, இரவு 8 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் பயணம்@ஐலன் நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• காதல் மாதிரி எனும் மனதை நெருடும் குடும்ப நாடகத் தொடரில் பிரபலமான உள்ளூர் திறமைகளானக் கவிதா தியாகராஜன், சசிகுமார், சீலன் மனோஹரன், தினேஷ் சாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல உள்ளூர் கலைஞரானச் சீலன் மனோஹரனால் தயாரிக்கப்பட்டுச் சிங்கப்பூர் கலைஞர் மதியழகன் மாணிக்கம் இயக்கி நடித்தக் காதல் மாதிரி ஜனவரி 15, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளரான உதயா (ராகா) தொகுத்து வழங்கும் பசங்க பொங்கல் எனும் வேடிக்கையான விளையாட்டு நிகழ்ச்சியில் டேனெஸ் குமார், விகடகவி மகேன், மூன் நிலா, நித்யா ஸ்ரீ மற்றும் குறிப்பிடத்தக்கப் பசங்க தொடரின் பல முக்கிய நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். பசங்க பொங்கல் ஜனவரி 16, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• புகழேந்தியும் நளனும் இணைந்து மாயாஜாலச் சுவையானச் சமையல் வகைகளை உருவாக்கித் தங்கள் உணவகமான ‘நளவெண்பா’வை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட நளவெண்பா எனும் நாடக டெலிமுவியில் சிறந்த உள்ளூர் திறமையாளர்களானக் கிஷோக், லோகன், கோமளா நாயுடு, விஸ்வா, குபேன் மகாதேவன் மற்றும் எம்.ஜே. நாடா ஆகியோர் நடித்துள்ளனர். இருப்பினும், மக்கள் பொறாமைப்பட்டு அவர்களைப் பிரிக்கத் திட்டமிடும்போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. உள்ளூர் திரைப்பட இயக்குநர் விக்ரமன் அர்ஜுனன் இயக்கிய நளவெண்பா ஜனவரி 17, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
இந்தியாவிலிருந்து பின்வரும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:
• ஷாம் செல்வன், ரக்ஷனா, பாரதிராஜா, சுசீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள நாடகத் திரைப்படம், மனோஜ் கே. பாரதி இயக்கிய மார்கழி திங்கள். மார்கழி திங்கள் ஜனவரி 14, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• பவன் ராஜகோபாலன் இயக்கத்திலான விவேசினி எனும் திரில்லர் திரைப்படம் நாசர், காவ்யா மற்றும் சுராஜ் ஆகியோரைத் தாங்கி மலர்கிறது. விவேசினி ஜனவரி 18, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்த மற்றும் ரமேஷ் தமிழ்மணி இயக்கிய நகைச்சுவைக் காதல் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட் ஜனவரி 19, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
• சீன் ரோல்டன், தரண் குமார், ஏடிகே, சத்ய பிரகாஷ், சாம் விஷால், நித்யா ஸ்ரீ மற்றும் கல்யாணி நாயர் உள்ளிட்ட பிரபல இந்தியப் பாடகர்களும் உள்ளூர் திறமையான முகேன் ராவும் பங்கேற்ற சவுண்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் (நியூ ஜென் மியூசிக் ஃபெஸ்ட் 2023) இசை நிகழ்ச்சி சிறந்த இசைப் படைப்புகளைச் சித்திரிக்கிறது. சவுண்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் (நியூ ஜென் மியூசிக் ஃபெஸ்ட் 2023) ஜனவரி 21, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.