Home நாடு இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்

இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்

420
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயின் சைனுடின் மீதான விசாரணைகளை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீதும் விசாரணைகளைத் தொடக்கியிருக்கிறது.

முந்திய பிரதமர்களின் நிர்வாகங்களின் கீழ் செயல்பட்ட அரசாங்கங்கள், 2020-2022-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 700 மில்லியனுக்கும் மேற்பட்ட ரிங்கிட் தொகையை விளம்பரங்களுக்காக செலவிட்டது தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்து இந்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.