Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆருடன் சுமூகத் தீர்வு – கோத்தா டாமன்சாராவிலிருந்து பின்வாங்க பாஸ் கட்சி முடிவு

பிகேஆருடன் சுமூகத் தீர்வு – கோத்தா டாமன்சாராவிலிருந்து பின்வாங்க பாஸ் கட்சி முடிவு

631
0
SHARE
Ad

Untitled-2

கோலாலம்பூர், ஏப்ரல்27 – கடந்த ஒரு வாரமாக கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பிகேஆர், பாஸ் மற்றும் பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) ஆகிய மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

கோத்தா டாமன்சாரா தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த பாஸ் தற்போது அதிலிருந்து பின்வாங்கி, பிகேஆர் கட்சிக்கு வழி விட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனால் ஏற்கனவே பிஎஸ்எம் கட்சி, பிகேஆருடன் செய்திருந்த ஒப்பந்தத்தின் படி, அக்கட்சியின் தலைவர் முகமது நஸீர் பின் காசிம் கோத்தா டாமன்சாராவில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரான முஸ்தபா அலி இன்று கோலாலம்பூரில் பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

பொதுத்தேர்தலில் கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில் பிஎஸ்எம் கட்சி, பிகேஆரின் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட முடிவெடுத்து அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

ஆனால் வேட்பு மனு தாக்கல் அன்று பாஸ் கட்சியும் கோத்தா டாமன்சாராவில் தங்களது வேட்பாளர் ராஸாலி இஸ்மாயிலை நிறுத்தப் போவதாக அறிவித்து பிகேஆருக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

அதன் பின் கூட்டணிக் கட்களுக்கிடையே  நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு, தற்போது அத்தொகுதியை பிகேஆருக்கு பாஸ் விட்டுக்கொடுத்துள்ளது.

கோத்தா டாமன்சாரா சட்டமன்ற தொகுதியில், பிகேஆர் வேட்பாளர் முகமது நஸீர் பின் காசிமை, எதிர்த்து அம்னோ வேட்பாளர் ஹாலிமாத்தான் சாதியா பிந்தி போகன் களமிறங்குகிறார். அதோடு மேலும் 3 சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குகிறார்கள். இதனால் அத்தொகுதியில் ஐம்முனைப் போட்டி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.