Home நாடு நஜிப் வீட்டுக் காவலில் சிறைத் தண்டனையைத் தொடர செய்த மேல்முறையீடு தள்ளுபடி!

நஜிப் வீட்டுக் காவலில் சிறைத் தண்டனையைத் தொடர செய்த மேல்முறையீடு தள்ளுபடி!

278
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாமன்னர் வழங்கிய தண்டனைக் குறைப்பைத் தொடர்ந்து எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க நஜிப் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை குறைப்புக்கான மாமன்னரின் உத்தரவில் வீட்டுக் காவல் தொடர்பான உத்தரவு இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதற்கான ஆதாரம் நிரூபணமாகவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

அவ்வாறு உத்தரவு இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட சத்தியப் பிரமாணங்கள் அனைத்தும் வெறும் செவிவழித் தகவல்கள்தான் என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி அமர்ஜிட் சிங் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹாமிடியும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலும் சமர்ப்பித்த சத்தியப் பிரமாணங்களில் மாமன்னரின் அத்தகைய உத்தரவு இருப்பதாக நேரடி ஆதாரம் இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, தாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறினார்.

மேல்முறையீடு தவிர்த்து மற்றொரு தனிப்பட்ட வழக்கைத் தொடுக்கத் தாங்கள் ஆலோசித்து வருவதாகவும் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.