Home உலகம் டிம் வால்ஸ் : கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர்!

டிம் வால்ஸ் : கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர்!

463
0
SHARE
Ad
டிம் வால்ஸ் – கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர்

வாஷிங்டன் — ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு நடப்பு துணையதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், யாரை அவர் துணையதிபராகத் தேர்ந்தெடுப்பார் என்ற ஆரூடங்கள் நிலவி வந்தன.

இறுதியில் தனது துணையதிபர் வேட்பாளராக மினெசொட்டா ஆளுநர் டிம் வால்ஸ் என்பவரை கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.

வால்ஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் காற்பந்து பயிற்றுநராகவும் வாழ்க்கை நடத்தியவர். கல்வி நலன்களுக்காக அவர் நீண்ட காலம் பணியாற்றி வந்தவர்.  ஓரின உறவு வாழ்க்கை நடத்துபவர்களுக்காகவும் அவர் ஆதரவு தெரிவித்தவர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் தனது துணையதிபர் வேட்பாளரை அறிவித்து விட்டார். செனட்டர் ஜே.டி.வான்ஸ் என்பவர்தான் அவர். அவரின் மனைவி உஷா வான்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். கமலா ஹாரிசின் இந்தியப் பின்னணி காரணமாக ஜே.டி.வான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

நாளை புதன்கிழமை பிலாடெல்பியா நகரில் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் கமலா தனது துணையதிபர் வேட்பாளருடன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் பல முக்கியத் தலைவர்கள் அதன் பின்னர் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை பகிரங்கமாக அளித்துள்ளனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களில் ஒருவராவார்.

அதிபர் தேர்தலில் சில சாதகங்களை கமலா கொண்டிருக்கிறார். பராக் ஒபாமாவுக்குப் பிறகு இரண்டாவதாக அதிபர் தேர்தலில் குதிக்கும் கறுப்பின இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் – வெற்றி பெற்றால் முதல் பெண் அமெரிக்க அதிபர் – முதல் இந்திய வம்சாவளி இனத்தவர் – ஆகியவையே அந்த சாதகங்கள்.

பைடனுடன் ஒப்பிடும்போது இந்த கறுப்பின, இந்திய, ஆசிய சமூகங்களின் ஆதரவை கமலா பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

59 வயதான கமலா 78 வயதான டிரம்பை விட வயது குறைந்தவர் என்பதும் அவருக்கான சாதகங்களில் ஒன்றாகும்.