Home Video கொட்டுக்காளி: சூரியின் வித்தியாச நடிப்பில் விருதுகள் குவிக்கும் படைப்பு!

கொட்டுக்காளி: சூரியின் வித்தியாச நடிப்பில் விருதுகள் குவிக்கும் படைப்பு!

203
0
SHARE
Ad

சென்னை : நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துக் கொண்டே, சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான பாத்திரங்களிலும் நடித்து தன் திறமையை நிரூபித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் சூரி. அவர் நடித்து அண்மையில் வெளியான ‘கருடன்’ வெற்றி வாகை சூடியது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விடுதலையும் வெற்றி பெற்றது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

அடுத்து சூரி கதைநாயகனாக நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படம் சில அனைத்துலகப் படவிழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். வழக்கமான முன்னோட்டங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி இரசிகர்களின் பரவலான பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ‘கொட்டுக்காளி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

யூடியூப் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் காணலாம்: