Home உலகம் இலங்கை நாடாளுமன்றத்தை அனுரா கலைத்தார்! நவம்பர் 14-இல் தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தை அனுரா கலைத்தார்! நவம்பர் 14-இல் தேர்தல்!

151
0
SHARE
Ad
அனுர திசாநாயக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இலங்கையின் கிறிஸ்துவ தலைவர் ஆர்ச் பிஷப் கார்டினல் மால்கம் ரஞ்சித் அவர்களைச் சந்தித்தபோது…

கொழும்பு : இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அநுர குமார திசாநாயக்க, திடீர் பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும். இலங்கையில் கடைசியாக பொதுத் தேர்தல் 2020 ஆகஸ்டில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கடந்த வார இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கையர்கள் மார்க்சிய சாய்வு கொண்ட திசாநாயக்கவை தேர்ந்தெடுத்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால் அவரது கூட்டணியான தேசிய மக்கள் கட்சிக்கு தற்போதைய நாடாளுமன்றத்தில் 225 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்களின் புதிய அதிகாரத்தைப் பெற அவர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முற்பட்டிருக்கிறார்.