Home Photo News செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

96
0
SHARE
Ad

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு – இவற்றுக்கு நடுவிலும் தீபாவளி என்றாலே குடும்பத்தினருடன் குதூகலத்துடன், கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு திருநாள்தான்.

உண்மையோ பொய்யோ, புராணக் கதையாக இருந்தாலும் – தீமையை நன்மை வீழ்த்தும் – எல்லா இன்னல்களும், இடர்களும் ஒரு நாள் மறையும் – அழியும் – நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமையும் வந்து சேரும், எதிர்காலம் தீபங்களின் வரிசை போல் என்றும் ஒளிமயமாகத் திகழும் என நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் நன்னாள் தீபாவளி.

இந்தப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் உலகெங்கிலும் உள்ள செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.