ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவுகளோடு இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.
தீபாவளியின் பின்னணியாக பல இதிகாசங்களும். புராணக் கதைகளும் இருந்தாலும், தீபாவளியைக் கொண்டாடும் வகையில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்திய அத்தனை விஷயங்களும் நமது வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை.
வீட்டைச் சுத்தம் செய்வது முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடை அணிவது, பெரியோரை வணங்குவது, ஆலயத்திற்குச் செல்வது என ஒவ்வொரு செயலுக்கும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் தீபத்திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம்.
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. தீபத்திருநாளில் வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீசும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதே இதன் தத்துவமாகும்.
வருடத்திற்கு ஒரு முறைதான் என ஆடம்பரம் இல்லாமல், சிக்கனமாகச் செலவு செய்வோம். பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு கொண்டாடுவோம்.
பண்டிகைகள், கொண்டாட்டங்களின் தத்துவமே பண்பாடுகளைப் பேணிக்காத்து ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்பதே. எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், பெரியோரை வணங்குதல் என ஒவ்வொரு செயலுக்கும் ஆழந்த அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாமும் தெரிந்து கொண்டு பிறருக்கும் புரியும்படி கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் தீபத்திருநாள் பெருமையையும் பிறர் உணரச் செய்வோம்.
பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அனைவரும் ஒன்றிணைந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தோடு கொண்டாடுவோம்.