Home நாடு மலேசிய இந்துக்களுக்கு மாமன்னரின் தீபாவளி வாழ்த்து

மலேசிய இந்துக்களுக்கு மாமன்னரின் தீபாவளி வாழ்த்து

220
0
SHARE
Ad

கோலாம்பூர்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் அவரின் துணைவியார் மாட்சிமை தங்கிய ராஜா சாரித் சோஃபியா, மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

நேற்று புதன்கிழமை (அக்டோபர் 30) தங்களின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தங்களின் வாழ்த்துகளை அவர்கள் பதிவிட்டனர்.

“உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தீபாவளியின் ஒளி நிறைந்திருந்து உங்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வந்து தரட்டும். உங்கள் அனைவருக்கும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஒளிமயமான,நல்லாசிகளுடன் கூடிய தீபாவளித் திருநாள் அமைவதற்கு எங்களின் நல்வாழ்த்துகள்” எனவும் அவர்கள் தங்களின் தீபாவளி செய்தியில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் தீபாவளி இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 31) கொண்டாடப்படுகிறது.