Home நாடு செல்லியல் குழுமத்தின் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியல் குழுமத்தின் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

112
0
SHARE
Ad

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டு தினமும் நம் வாழ்க்கையில் இன்னொரு நாள் மட்டுமே, என்றாலும், ஆண்டின் அந்த முதல் நாள் நமக்கு வாரி வழங்குகின்ற நம்பிக்கை எண்ணங்கள் அளவிட முடியாதவை.

புத்தாண்டு தின சூழல் நமக்குள் ஏற்படுத்துகின்ற உற்சாக எதிர்பார்ப்புகள் எண்ணிலடங்காதவை.

நம்மிடையே ஒவ்வொருவரும் பரிமாறிக் கொள்ளும் வாழ்த்து வண்ணங்களும் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் தருபவை.

#TamilSchoolmychoice

நமக்கு முன்னே நீண்டு கிடக்கும் 2025-ஆண்டுக்கான வாழ்க்கைப் பயணப் பாதையை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம். திடமான மன உறுதியோடும், எல்லாம் நன்மையில் முடிவுறும் என்ற நல்லெண்ணத்தோடும் புத்தாண்டைச் சிறப்பாகத் தொடங்குவோம்.

அனைவரின் வாழ்விலும் வசந்தமும் வளமும் பெருகிட, செல்வச் செழிப்புகள் பொழிந்திட, செல்லியல் குழுமத்தின் இனிய 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்!