Home அரசியல் ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமாருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது

ஹிண்ட்ராப் தலைவர் உதயகுமாருக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது

522
0
SHARE
Ad

uthayakumar(கூடுதல் தகவல்களுடன்) கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஹிண்ட்ராப் முன்னோடிகளில் ஒருவரான பி.உதயகுமாரின் மீது சுமத்தப்பட்டிருந்த தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு அவர் வரத் தவறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு கைது ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து உதயகுமார் கூறுகையில், “உடல் நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் ஏப்ரல் 2 முதல் மே மாதம் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற விசாரணைகளுக்கு வர இயலாது என்ற கோரிக்கை அடங்கிய மருத்துவச் சான்றிதழை, எனக்கு ஜாமீன் கொடுத்தவர் மூலம் இன்று காலை 9 மணியளவில் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தேன்.

ஆனால் அதை ஏற்க மறுத்த அரசாங்க வழக்கறிஞர், நீதிபதியிடம் கைது ஆணை உத்தரவைப் பிறப்பிக்கும் படி கேட்டதைத் தொடர்ந்து, நீதிபதி அகமட் சாமானியும் கைது ஆணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் தனக்கு முதுகு தண்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக தன்னால் நீண்ட நேரம் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாமல், அவ்வப்போது தனது அறைக்குள் சென்று சிறிது நேரம் ஒய்வு எடுப்பதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

அதோடு மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகராஜா பரமேஸ்வரன் தனக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தான் தனக்கு மருத்துவ சான்றிதழ் அளித்ததாகவும் உதயகுமார் தெரிவித்தார்.