Home Uncategorized லண்டனில் ஏலத்தில் விடப்படும் காந்தியின் ரத்தம்

லண்டனில் ஏலத்தில் விடப்படும் காந்தியின் ரத்தம்

606
0
SHARE
Ad

gandhiலண்டன், மே. 3- ‘தேசபிதா’ மகாத்மா காந்தி பயன்படுத்திய அவரது 50 நினைவு பொருட்களை லண்டனில் உள்ள “முல்லோக்” மையத்தில் வருகிற 21-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் மேலாடை,கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும். இவை தவிர காந்தியின் ரத்த துளியும் இந்த ஏலத்தில் விடப்பட உள்ளது.

கடந்த 1924-ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி ரத்த தானம் செய்தார். அதற்காக அவரது ரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வைத்து பரிசோதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த ரத்த துளிகளே ஏலத்துக்கு வருகிறது. அது மட்டும் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.