Home கலை உலகம் மராட்டிய மாநிலத்தில் வறட்சி- நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார்

மராட்டிய மாநிலத்தில் வறட்சி- நடிகர் சல்மான்கான் 2,500 குடிநீர் தொட்டிகள் வழங்கினார்

692
0
SHARE
Ad

salmanமும்பை, மே 3- இந்தி நடிகர் சல்மான்கான் சமீபகாலமாக பொதுச் சேவைகளை செய்து வருகிறார்.

‘பீயிங் ஹியூமன்’ (மனிதனாக இருப்பது) என்ற அமைப்பை ஏற்படுத்தி கல்வி உதவி திட்டங்களையும் இவர் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டிகளை வழங்க சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திற்கு 750 தொட்டிகளும், உஸ்மானாபாத் மற்றும் ஜல்னா மாவட்டங்களுக்கு தலா 500 தொட்டிகளும், அவுரங்காபாத் மற்றும் நான்டெட் மாவட்டங்களுக்கு தலா 250 தொட்டிகளும் முதல் கட்டமாக அனுப்பப்படுகிறது.