Home கலை உலகம் தமிழில் நிச்சயம் ஜெயிப்பேன்- சித்தார்த்

தமிழில் நிச்சயம் ஜெயிப்பேன்- சித்தார்த்

715
0
SHARE
Ad

sidarthசென்னை, மே 4- சித்தார்த், ஹன்சிகா, சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தீயா வேலை செய்யணும் குமாரு.

யுடிவி மோசன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், சத்யாவின் இசையில், சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இப்படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட, இயக்குனர் கே.வி.ஆனந்த் பெற்று கொண்டார்.

பின்னர் சித்தார்த் பேசுகையில், தமிழ்நாட்டில் பிறந்து பிற மொழியில் ஜெயித்தாலும் தமிழில் நல்ல இடம் கிடைக்காத வருத்தம் இருந்தது. இப்போது அது நீங்கி வருகிறது.

சமீபத்தில் நான் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, உதயம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நான் கேட்டுப்பெற்ற வாய்ப்பு இந்தப் படம். கடுமையாக உழைத்திருக்கிறேன். பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன். சினிமா விமர்சனங்கள் பற்றி இங்கு பேசினார்கள். சினிமாவுக்கு விமர்சனம் மிகவும் முக்கியம்.

விமர்சனங்களையும், விமர்சகர்களையும் கடுமையாக  எடுத்துக் கொள்ளக்கூடாது.

நியாயமான விமர்சனமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாமல் இருந்தால் ரசித்துவிட்டு விட்டுவிட வேண்டும்.

மகத்தான சாதனைகள் புரிந்த சச்சினையே ஓய்வெடுக்கச் சொன்ன விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.