Home நாடு நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

484
0
SHARE
Ad

Spr-Election-INK-300x202கோலாலம்பூர், மே 5 – இன்று நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில் நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் அதாவது 12,992,661 மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணைய துணைத்தலைவர் வான் அகமத் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.

மலேசிய தேர்தல் வரலாற்றிலேயே இன்றைய தேர்தலில் தான் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 78.9 சதவிகித வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஆனால் இன்றைய தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது என்றும் ஓமார் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடெங்கிலும் உள்ள 8,245 வாக்கு மையங்களில் பெரும்பான்மையானவை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியோடு நிறைவடைந்தன.

#TamilSchoolmychoice

அதே போல், துங்கு சட்டமன்றத் தொகுதி லகாட் டத்து மற்றும் சபாவில் மட்டும் மதியம் 3 மணியோடு  வாக்களிப்பு நிறைவடைந்து விட்டதாக ஓமார் தெரிவித்தார். அதோடு மாலை 5.30 மணிக்குப் பிறகு வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.