Home நாடு பினாங்கு மாநில முதல்வராக லிம் குவான் எங் மீண்டும் பதவி ஏற்கிறார்

பினாங்கு மாநில முதல்வராக லிம் குவான் எங் மீண்டும் பதவி ஏற்கிறார்

594
0
SHARE
Ad

Lim Guan Engஜோர்ஜ் டவுன், மே 6 – பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சரும், ஜ.செ.க கட்சியின் பொதுச்செயலாளருமான லிம் குவான் எங், வரும் செவ்வாய் கிழமை காலை 11:30 மணிக்கு மீண்டும் முதலமைச்சாராக பதவி ஏற்கவுள்ளார்.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பாகான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட லிம் குவான் எங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சுவா தெங் சியாங்கை விட 34, 159 வாக்குகள் வித்தியாசத்திலும், அதே நேரத்தில் தான் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியான ஆயர் பூத்தேயில் தேசிய முன்னணிக்கு எதிராக 7,744 வாக்குகள் வித்தியாசத்திலும்  லிம் குவான் எங் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

#TamilSchoolmychoice