Home நாடு நிக் அசிசுக்குப் பதிலாக டத்தோ அகமட் யாக்கோப் கிளந்தான் மந்திரி பெசாராக நியமனம்!

நிக் அசிசுக்குப் பதிலாக டத்தோ அகமட் யாக்கோப் கிளந்தான் மந்திரி பெசாராக நியமனம்!

718
0
SHARE
Ad

Nik-Aziz-featureகோத்தா பாரு, மே 7 – கிளந்தான் மாநிலத்தில் நீண்ட காலமாக மந்திரி பெசாராக இருந்து வரும் பாஸ் கட்சியின் ஆன்மீக குரு நிக் அசிசுக்குப் பதிலாக டத்தோ அகமட் யாக்கோப் புதிய கிளந்தான் மாநில மந்திரி பெசாராக இன்று கிளந்தான் சுல்தான் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

கிளந்தானை த் தொடர்ந்து ஆறாவது தவணையாக கைப்பற்றுவதில் வெற்றிக்கொண்டுள்ள டத்தோ நிக் அசிஸ் நிக் மாட் (வயது 82), மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மாநில வரலாற்றில் 22 ஆண்டுகளில் முதன் முறையாக , புதிய மந்திரி பெசாராக டத்தோ அகமட் யாகோப் நேற்று கிளந்தான் சுல்தான் முன்னிலையில் பதவி பரிமாணம் எடுத்துகொண்டார்.

#TamilSchoolmychoice

மாநில பாஸ் செயற்குழுவினர் நேற்று முன்தினம் இரவு சந்தித்து இந்த முடிவை எடுத்ததாக டத்தோ நிக் உறுதிப்படுத்தினார்.

இஸ்தான குபாங் கிரியானில் நேற்று மாலை நடைபெற்ற சடங்கில் புதிய துணை மந்திரி பெசாரும், புதிய ஆட்சிக்குழுவினரும் பதவிப் பரிமாணம் எடுத்துக்கொண்டனர்.