பெட்டாலிங் ஜெயா, மே 8- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கிளானா ஜெயாவில் நடத்தும் மக்களுடான சந்திப்புக் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என்று போலீஸ் துறை தலைவர் டான்ஸ்ரீ ஓமார் இஸ்மாயில் (படம்) கூறியுள்ளார்.
நேற்று பத்திரிகைகளில் அன்வாரின் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்றும், ஆதலால் அக்கூட்டம் சட்டவிரோதமானது என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த பத்திரிகை செய்தியை போலீஸ் தலைவர் மறுத்துள்ளார்.
எந்தவொரு கூட்டமும் ஆயுதமுன்றி, அமைதியாக நடைபெற்றால் அதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. ஆனால் ஏற்பாட்டாளர்கள் அந்த வட்டார காவல் நிலையத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெளிவுப்படுத்தினார்.
அந்நிகழ்வுகளில் தேச நிந்தனை மற்றும் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை அமையக்கூடாது என்று போலீஸ் தலைமையகத்தின் பொது உறவு அதிகாரி ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.