Home Uncategorized பற்களைப் பாதுகாப்பது எப்படி?

பற்களைப் பாதுகாப்பது எப்படி?

574
0
SHARE
Ad

smileகோலாலம்பூர், மே 9- அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்.

ஒருவரின் முகத்திற்கு அழகைத் தருவது அவரது பற்களே.

பற்கள் சீராகவும், ஒழுங்காகவும் அமையாவிட்டால் மனிதர்களின் அழகே கேள்விக்குறியாகி விடும்.

#TamilSchoolmychoice

நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை அரைப்பதுடன், உணவானது எளிதில் செரிமானம் அடைய பற்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பல்போனால், சொல்போச்சு என்பார்கள். எனவே நாம் பேசுவதற்கும் பற்கள் மிகவும் முக்கியம்.

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளே. ஈறுகளில் நோய் ஏற்படுவதன் முதல்கட்டம், நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் போன்றவை ஏற்படலாம்.

பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே சாதாரணமாகவே உள்ள இடைவெளி நோய் ஏற்படும்பட்சத்தில், பாக்டீரியா மற்றும் அதனால் வெளிவரும் விஷப் பொருட்களாலும் உமிழ் நீருடன் சேர்ந்து ஈறுகளில் பள்ளத்தை ஏற்படுத்தி விடும். இதன் தொடர்ச்சியாகவே ஈறுகளில் அதிக இடைவெளி ஏற்பட்டு, பற்கள் ஆடத்தொடங்கி முடிவில் பற்களை எடுக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு விடும்.

சில நேரங்களில் தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

ஈறுகளில் இரத்தம் கசிதல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படக்கூடும். 

பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படர்ந்து, நாளடைவில் காரையாக மாறி விடுகிறது.