Home கலை உலகம் மூன்றாவது முறையாக பாலாவுடன் கூட்டணி சேரும் விக்ரம்

மூன்றாவது முறையாக பாலாவுடன் கூட்டணி சேரும் விக்ரம்

772
0
SHARE
Ad

vikramமே 10- கொலிவுட்டில் பாலாவின் பரதேசி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பாலா தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார்.

முதலில் இந்தப் படத்தில் சசிகுமார் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. தற்போது அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

இந்த யூகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து தனது படத்தின் நாயகனை தெரிவு செய்திருக்கிறார் பாலா.

#TamilSchoolmychoice

சேது, பிதாமகன் என இரண்டு படங்களில் பாலாவுடன் பணியாற்றி இருக்கும் விக்ரம் தான் புதிய படத்திலும் நாயகன்.

இதன் மூலம் விக்ரம்-பாலா கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கிறது.

தனது முந்தைய படமான பரதேசி படத்தில் பணியாற்றிய ஜி. வி பிரகாஷ், செழியன் ஆகியோர்கள் தான் இந்தப் படத்திலும் பணியாற்ற இருக்கின்றனர்.

படப்பிடிப்பு இம்மாதமே தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஐ’ படத்தில் நடித்து வரும் விக்ரம், விரைவில் பாலாவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.