Home அரசியல் “காலிட் மந்திரி பெசாராக நீடிக்க ஆதரிப்போம்” – அஸ்மின் அலி திடீர் பல்டி!

“காலிட் மந்திரி பெசாராக நீடிக்க ஆதரிப்போம்” – அஸ்மின் அலி திடீர் பல்டி!

602
0
SHARE
Ad

Azmin Aliமே 11 – கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிக்கைகள் விட்டு சர்ச்சைகளை கிளப்பி வரும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின், தான் இதுவரை பேசி வந்ததற்கு நேர்மாறாக, நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தொடர்ந்து மந்திரி பெசாராக நீடிப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ட்விட்டர் எனப்படும் சமூக வலைத் தளத்தில் அடிக்கடி தனது கருத்துக்களைப் பதிவு செய்யும் அஸ்மின் அலி, அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடினுக்கு அனுப்பிய ட்விட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“உங்களை மந்திரி பெசாராக பார்க்க விரும்புகின்றேன்” என்று கைரி ஜமாலுடின் அனுப்பிய ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கையில் அஸ்மின் அலி “காலிட் தொடர்ந்து செயலாற்ற நாம் ஆதரிக்க வேண்டும்” என்று பதில் ட்விட்டர் செய்தி அனுப்பியுள்ளார்.

அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனத்தில் கட்சித் தலைவர் வான் அசிசா நடந்து கொண்டவிதம் குறித்தும், மற்ற விவகாரங்கள் குறித்தும் பகிரங்கமாக எதிர்த்துப் பேசியுள்ள அஸ்மின் அலி, திடீரென்று இவ்வாறு காலிட்டுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.